நம் அனைவருக்கும் ஆன்லைன் ஷாப்பிங் கார்ட்(Online Shopping Cart) என்றவுடன் நினைவுக்கு வருவது அமேசான்(Amazon), பிளிப்கார்ட்(Flipkart) போன்ற பிரபலமாக இருக்கக்கூடிய ஒரு சில இணையத்தளங்கள் மட்டுமே , இதன் முக்கியகாரணம் அவர்கள் எவ்வாறு, எப்படி (How to Promote Website ?) மற்றும் எப்படிப்பட்ட மக்களை (How to Reach Target Customers ?) தங்களின் நிறுவன விளம்பரங்கள் சென்று அடைய வேண்டும் என்ற வியாபார விளம்பர (Advertisement Ideas) யுக்தியை முழுவதுமாக அறிந்தது மற்றும் அதை நடைமுறைப்படுத்தியதால் தான் அவர்கள் வெற்றியை எளிதில் அடைய முடிந்தது . இன்றைய நிலையில் தமிழ்நாட்டில் சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான ஷாப்பிங் கார்ட் (Online Shopping Cart Website ) இணையதளங்கள் இருக்கின்றன . வெறும் ஷாப்பிங் கார்ட் இணையதளத்தை வைத்துக்கொண்டு இருந்தால் மட்டும் வெற்றி தேடி வருவதில்லை , வெற்றி நம்மை தேடி வருவதற்கு நமது இணையதளத்தை முறையாக டிஜிட்டல் மார்க்கெட்டிங் (Digital Marketing) செய்தால் தான் நமது இணையதளத்தை வருமானம் மற்றும் பெயர் தரக்கூடிய ஒரு பிசினெஸ் மாடலாக (Website Branding) மாற்றலாம் .
COVID situation-க்கு பின்னர் இன்றைய சூழ்நிலையில் சிறு மற்றும் குறு வியாபாரிகள் (Small Level Business & Medium Level Business Peoples) ஏன் ஆன்லைன் வர்த்தகத்திற்கு மாறவேண்டும் என்றால் ஆன்லைன் வணிகத்தில் (Online Sales) பல விதமான நன்மைகள் அவர்களுக்கு கிடைக்கும் .
ஆன்லைன் வணிகத்திற்கு என்று தனியாக பெரிய கடை தேவை இல்லை, அதனால் கடை வாடகை ( Office Rental) ,அட்வான்ஸ் தொகை (Office Advance) , இன்டீரியர் டிசைன்ஸ் (Office Interior Design) , கடை வரி (Office Tax) , மேற்பார்வை செலவு என பல வழியில் ஒரு மிகப்பெரிய தொகை மிச்சமாகும் இதைக்கொண்டு இன்னும் அதிகமாக பொருளை விலை குறைத்து கொள்முதல் செய்ய முடியும் . இல்லையெனில் இந்த செலவை உங்கள் பொருளை விற்பனை செய்யும் போது சேர்க்காமல் இருந்தால் உங்களால் மிக மிக குறைவான விலையில் ( Low Cost Pricing ) விற்பனை செய்ய முடியும்.
ஆன்லைன் வணிகத்தில் (Online Business Cusotmer) வாடிக்கையாளரிடம் முழு பணமும் பெற்ற பின்னரே பொருளை விற்பனை செய்ய முடியும் .இதனால் நமக்கு கடன் பாக்கி இல்லாமல் வியாபாரம் செய்யமுடியும் .
ஆன்லைன் வணிகம் மூலமாக நாம் நமது ஆன்லைன் விளம்பர யுக்தியை பயன்படுத்தி (Online Advertisement Ideas) உலகில் எந்த ஒரு இடத்தில் இருந்தும் புதிய வாடிக்கையாளர்களைப் (Online New Customer ) பெற முடியும் . நாம் நமது வாடிக்கையாளர்கள் (Small Targeted Customers Circle) என்ற ஒரு சிறிய வட்டத்தை ஏற்படுத்தி ஒரு சிறிய கிராமத்திலோ ,நகரத்திலோ நாம் முடங்க தேவை இல்லை . நாம் நமக்கு இந்த உலகில் எங்கு வேண்டுமானாலும் வாடிக்கையாளர்களை ஏற்படுத்திக் கொள்ள முடியும் .
ஆன்லைனில் பொருளை வாங்கும் போது வாடிக்கையாளர்கள் தங்களின் முழு விவரங்களை கொடுப்பதால் நாம் நமது புதிய பொருளின் விளம்பரங்கள் , (New Products Advertisement) பொருளின் சலுகைகள் (Products Discounts & Products Offers) , மறு முறை பொருளை வாங்குவதற்கான குறுஞ் செய்திகள்(SMS Alert) , வாட்ஸ்அப்(WhatsApp Alert) போன்றவற்றை அனுப்புவதன் மூலம் நாம் வாடிக்கையாளர்களிடம் நல்ல தொடர்பில் (Maintaining Good Customer Relationship) இருக்க முடியும் .
முதலில் சிறு மற்றும் குறு வியாபாரிகள் ஆன்லைன் சந்தையில் தொடங்குவதற்கு முன் முதலில் அவர்கள் இந்த கால வியாபார விற்பனை யுக்தியை அறிந்து கொள்ள (Latest Marketing Strategy) , கற்று கொள்ள தங்களை தயார்படுத்திக் (Learn & Know Current Online Market) கொள்ள வேண்டும் .
தங்களின் விற்பனை பொருளை எவ்வாறு விற்பனை செய்ய வேண்டும் ?, (How to Sale our Products in Online?)
எப்படி விற்பனை செய்ய வேண்டும் ?
எங்கு விற்பனை செய்ய வேண்டும் ? (Where to Sell our Products in Online?)
என்ன விலையில் விற்பனை செய்ய வேண்டும் ? (What is the Product Price in Online ?)
எந்த மக்களை சென்று அடைய வேண்டும் ? (How to Reach Online Customers?)
என்ற கேள்விகளுக்கான விடையைக் கண்டறிந்தால் அவர்களுக்கான மிகப்பெரிய விற்பனை சந்தை (Online Market Scope) காத்துக் கொண்டு இருக்கிறது .
இனி வரும் காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங் (Online Shopping Cart) என்பது தவிர்க்க முடியாத வியாபார சந்தையாக(Online Business Market) மாறிவிடும் . அதை மனதில் கொண்டு முடிந்தவரை சிறு மற்றும் குறு தொழில் செய்யும் வியாபாரிகள் (SME Business Sector Compaies) இப்போதே தங்களை இணையதள சந்தைக்கு(Online Market) தயார்படுத்தி கொண்டால் நிச்சயமாக அவர்கள் எதிர்கால ஆன்லைன் சந்தையில் மிக முக்கிய அங்கமாக இருப்பார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை .
Inclusive of GST
Inclusive of GST
Inclusive of GST
Inclusive of GST